பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரம் எது தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை சிஎம்ஐஇ வெளியிட்டுள்ளது.
பெண்கள்
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து ஓட்டுநர் வேலையில் தொடங்கி துப்புரவு தொழில் வரை பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும், குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதற்காகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 70 சதவீத பெண்கள் ஏதோ சூழலில் தொழில் முனைவோராக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறனர். இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பான நகரம்
இதற்காக சிஎம்ஐஇ நிறுவனம் நாடு முழுவதும் 60 நகரங்களில் ஆய்வு நடத்தியது. அதில் சுமார் 1,672 பெண்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.அதில் ,பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கமாக பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
முதல் இடத்திலிருந்த சென்னை 2 வது இடத்தை பிடித்துள்ளது. 3 வது இடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது.இதனைத் தொடர்ந்து மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, குருகிராம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் டாப் 10-ல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன குறிப்பிடத்தக்கது.