ஹோட்டலில் இதை செய்யவே கூடாது - வாடிக்கையாளர்களுக்கு விநோத எச்சரிக்கை!
உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை கவனம் பெற்றுள்ளது.
எச்சரிக்கை பலகை
பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் சுவரில் ஒட்டப்பட்ட ஒரு பலகையில் அனைவருக்கும் தெரியும் வகையில் விதி ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் அல்லது சொத்து தொடர்பான வீண் விவாதங்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகங்கள் எழுதப்பட்ட பலகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் ஃபோட்டோ
பலர் இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு ஏற்றதாகவே கருதுகின்றனர். ஏனெனில் பெரும்பாலும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச ஆர்டர்களை மட்டுமே செய்து கொண்டு மணிக்கணக்கில் மேஜையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
Clear instructions alright. pic.twitter.com/jMyuOOv1zX
— Farrago Metiquirke (@dankchikidang) March 4, 2025
இது உணவகத்தின் வணிகத்தைப் பாதிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், "இது விசித்திரமாக இருக்கிறது. மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை இவர்கள் ஏன் கண்காணிக்க வேண்டும்? அவர்கள் சாப்பிடும் உணவுக்கு பணம் செலுத்துகிறார்கள் தானே" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் கருத்து தெரிவித்துள்ளார்.