விமானத்தில் எவ்வளவு நகை, பணம் கொண்டு வரலாம்? என்னென்ன சலுகைகள்
விமானங்களில் எவ்வளவு தங்கம், ரொக்கப் பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
விமான பயணம்
இந்தியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் சுங்க சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். வரி விதிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் பயணிகள் சுங்க அறிவிப்புப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
5,000 டாலருக்கு அதிமாக வெளிநாட்டு பணம் எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதனை அறிவிக்க வேண்டும். சர்வதேச பயணிகள் ரூ.50,000 வரை மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். 18 வயது மேற்பட்டோர் ஒரு லேப்டாப் எடுத்துவர அனுமதி உண்டு. 2 லிட்டர் வரை மதுபானம் எடுத்துவர முடியும்.
சலுகைகள்
100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி விலக்கு உடன் கொண்டுவர முடியும். இவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள். மற்றவர்கள் ரூ.15,000 வரை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கொண்டுவர முடியும்.
இந்திய பயணி என்றால் 20 கிராம் வரை நகைகளை வரி இல்லாமல் எடுத்துச் செல்லலாம். ஆண் பயணி என்றால் ரூ.50,000 ஆகவும், பெண் பயணி என்றால் ரூ.1,00,000 (ஒரு லட்சம்) ஆகவும் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் ஒரு இந்தியர் 1 கிலோவிற்கு மேல் தங்கம் கொண்டு வந்தால்,
இந்திய சந்தையின்படி தங்கத்தின் விலையில் 36.05 சதவீதத்தை சுங்க வரியாக செலுத்த வேண்டும். வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் மட்டுமே தங்கியிருந்து தங்க நகை வாங்கிச் சென்றால் கட்டாயம் சுங்க வரி செலுத்த வேண்டும். மேலும், இந்திய ரூபாய் என்றால் ரூ.25,000 வரை எடுத்து வரலாம்.