இந்த முறையும் RCB-க்கு கப் கிடைக்காது; அந்த மோகம் தான் காரணம் - முன்னாள் வீரர் தாக்கு!

Royal Challengers Bangalore Cricket Sports IPL 2024
By Jiyath May 15, 2024 02:35 PM GMT
Report

பெங்களூரு அணி பிளே ஆப் சென்று கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அணி 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. இதுவரை அந்த அணி 13 போட்டிகளில் விளையாடியுள்ளது.

இந்த முறையும் RCB-க்கு கப் கிடைக்காது; அந்த மோகம் தான் காரணம் - முன்னாள் வீரர் தாக்கு! | Bengaluru Wont Win The Trophy Says Mohammad Kaif

அதில் 6 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை அணியை தங்களது கடைசி ஆட்டத்தில் எதிர்கொள்ளும் பெங்களூரு அணி, அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு அணி பிளே ஆப் சென்று கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது "ஆரம்பத்தில் பெங்களூரு அணி மோசமாக விளையாடினார்கள். தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்த அவர்கள் ஒரு மாதம் வெற்றியை பதிவு செய்யவில்லை.

என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK?

என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK?

இந்திய வீரர்கள் 

அதனாலேயே அவர்கள் இந்த நிலைமைக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களின் கம்பேக்கை பாராட்ட வேண்டும். இருப்பினும் அவர்கள் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த முறையும் RCB-க்கு கப் கிடைக்காது; அந்த மோகம் தான் காரணம் - முன்னாள் வீரர் தாக்கு! | Bengaluru Wont Win The Trophy Says Mohammad Kaif

எனவே இது அந்த அணிக்கு அடுத்த வருடத்திற்கான பாடமாகும். கொல்கத்தா அணி இந்திய வீரர்கள் மீது அதிக முதலீடு செய்த காரணத்தாலேயே புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தில் உள்ளனர். ராஜஸ்தான் அணியும் அதேபோல செயல்படுகிறது. எனவே பெங்களூரு அணியும் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆதரவு கொடுக்க வேண்டும். அவர்கள் எப்போதும் வெளிநாட்டு வீரர்கள் மீது மோகத்தை கொண்டுள்ளனர். கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திரங்கள் இல்லாமல் நம்மால் வெல்ல முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள்.

எனவே இந்திய வீரர்கள் மீது முதலீடு செய்தால் அவர்களால் கோப்பையை வெல்ல முடியும். ராஜஸ்தான் அணியும் அதை செய்துள்ளது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல் போன்றவர்களை அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்" என்று தெரிவித்துள்ளார்.