விடிய விடிய குதூகலமாக இருந்த நடிகைகள்; பண்ணை வீட்டில் அந்த மாதிரி பார்ட்டி- நடந்தது என்ன?
ரேவ் பார்டியில் பிரபல நடிகைகள் பங்கேற்று போதைப் பொருள் பயன்படுத்தியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
விடிய விடிய குதூகலம்
ரேவ் பார்டி என்றால் வெளிநாட்டு மது, ஹைட்ரோ கஞ்சா, கொகைன் என உயர்ரக போதைப் பொருட்களுடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி என்று அர்த்தமாகும். இதில் இளம் பெண்கள் போதையிலேயே விடிய விடிய நிர்வாணமாக நடனமாட வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும், ரிசார்ட்டுகளிலும், பண்ணை வீடுகளிலும் வார இறுதியில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், பெங்களூரின் புறநகரில் கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இந்த ரேவ் பார்டி நடந்தது. அதில் தெலுங்கு திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகைகள் கலந்துகொண்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அங்கு அதிரடியாக நுழைந்தனர்.
அப்போது போதையில் நடனமாடி கொண்டிருந்த பெண்கள் சிதறி ஓடினர். மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் தெலுங்கு நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், ஐ.டி. நிறுவன ஆண், பெண் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த போதை விருந்தில் பங்கேற்றது தெரியவந்தது.
நடந்தது என்ன?
இதுதொடர்பாக 5 பேர் கைது செய்தனர். ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரான வாசு, தனது பிறந்தநாளையொட்டி விருந்து ஏற்பாடு செய்திருந்ததும், இதில் தெலுங்கு திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டதும் தெரியவந்தது. தெலுங்கு நடிகை ஹேமா போதை விருந்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை ஹேமா வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதேபோல் மற்றொரு தெலுங்கு நடிகை ஆஷா ராயும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் இந்த மது விருந்தில் நடிகை ஹேமா பங்கேற்று இருந்ததை பெங்களூரு போலீஸ் கமிஷனர் உறுதி செய்தார். மேலும் சில தெலுங்கு நடிகைகள் பங்கேற்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பிடிபட்ட 103 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகள் வெளியானது. அதில் 86 பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது. குறிப்பாக தெலுங்கு நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷா ராய் ஆகிய 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
இதையடுத்து உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். அதன் பிறகே அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.