சென்னை வி.ஆர் மால்-இல் நடைபெற்ற சட்டவிரோத டி.ஜே. பார்ட்டி - இளைஞர் உயிரிழப்பு, போலீசார் எச்சரிக்கை!

Chennai Tamil Nadu Police
By Swetha Subash May 22, 2022 12:31 PM GMT
Report

சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ள வி.ஆர்.மால்-இல் நேற்று இரவு நான்காவது தளத்தில் ப்ரேசில் நாட்டை சேர்ந்த மந்த்ராகோரா என்ற உலகப் புகழ்பெற்றவரின் பெயரால் DJ ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொள்ள ரூ.1500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் அனுமதியின்றி இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை வி.ஆர் மால்-இல் நடைபெற்ற சட்டவிரோத டி.ஜே. பார்ட்டி - இளைஞர் உயிரிழப்பு, போலீசார் எச்சரிக்கை! | Youth Died In Private Party At Vr Mall Chennai

விசாரணையில் 900-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு அனைவரும் மது போதையில் இருந்ததுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அங்கிருந்து 844 விலை உயர்ந்த மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துரை, விக்னேஷ், பரத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடிய 23 வயதான தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சென்னை வி.ஆர் மால்-இல் நடைபெற்ற சட்டவிரோத டி.ஜே. பார்ட்டி - இளைஞர் உயிரிழப்பு, போலீசார் எச்சரிக்கை! | Youth Died In Private Party At Vr Mall Chennai

அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியிருந்ததால் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானக் கூடங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சட்டவிரோத மது விருந்து நடத்தப்பட்ட மாலுக்கு காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.