இனி போக்குவரத்து நெரிசலுக்கு வரி - லண்டனை அடுத்து இங்கயும்..!
போக்குவரத்து நெரிசலுக்கு புதிய வரி ஒன்றை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
பெங்களூரு நகர சாலைகளில் தினமும் 12 மில்லியன் வாகனங்கள் செல்கின்றன. மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 60 கோடி மணி நேரங்களை வீணடிக்கிறார்கள்.
1 மணி நேரத்தில் சுமார் 2.8 லட்சம் லிட்டர் எரிபொருள் வீணடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்
Congestion Tax
9 சாலைகள் வழியாக பீக் ஹவர்களில் நுழையும் வாகனங்களுக்கு Congestion Tax விதிக்கவுள்ளனர். பழைய விமான நிலைய சாலை, ஓல்ட் மெட்ராஸ் சாலை, வெளிவட்டச் சாலை, சர்ஜாபூர் சாலை, பல்லாரி சாலை, ஓசூர் சாலை, பன்னர்கட்டா சாலை,
கனகபுரா சாலை, துமகுரு சாலை, மாகடி சாலை மற்றும் வெஸ்ட் ஆஃப் சோர்ட் சாலை உள்ளிட்ட சாலைகளில் இந்த புதிய வரி வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வாகன நெரிசல் வரியை தற்போது வாகனங்களில் பயன்பாட்டில் இருக்கும் பாஸ்டேக் முறையின் மூலம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சிங்கப்பூர், லண்டன், ஸ்டாக்ஹோம் ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் வரி விதிக்கப்பட்டு வருகிறது.