முழுசா மாறும் சென்னையின் அடையாளம் - அதிரடியாக முடிவெடுத்த சென்னை மாநகராட்சி
சென்னை தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் புதியதாக மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
சென்னை தி நகர்
சென்னையின் முக்கிய வணிக இடமான தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
இணைக்கப்படும் மேம்பாலங்கள்
தெற்கு உஸ்மான் சாலை - சிஐடி நகர் இடையே, இந்த புதிய இரும்பு மேம்பாலம் வரப்போகிறது. தி.நகர் பஸ் நிலையம், விவேக் ஜங்ஷன், ஆற்காடு ரோடு சந்திப்பு ஆகியவற்றை கடந்து மகாலிங்கபுரத்தில் இந்த மேம்பாலம் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
தியாகராய நகரின் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தையும் இணைத்து புதிய மேம்பாலம் அமைத்திட முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் தூரம் மட்டும் 4 கிலோமீட்டர் ஆகும்.
அவ்வாறு இந்த இரு மேம்பாலங்கள் இணைக்கப்பட்டால் சென்னையில் இந்த மேம்பாலமே மிக நீண்ட மேம்பாலமாக இது அமையும்.