இங்க இருந்த சிக்னல் எங்க..தவிக்கும் சென்னை வாசிகள் - இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

Chennai
By Sumathi Mar 17, 2023 05:53 AM GMT
Report

பீக் ஹவரில் வழிகாட்டுதல் இன்றி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

சென்னையில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் என்பது தினசரி கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு அசோக் நகரை எடுத்துக் கொள்ளலாம். இங்குள்ள ஜவஹர்லால் நேரு சாலை 160 மீட்டர் அகலம் கொண்டது.

இங்க இருந்த சிக்னல் எங்க..தவிக்கும் சென்னை வாசிகள் - இதுக்கு ஒரு முடிவே இல்லையா? | Lack Of Signals Turn Chennai Chaotic Peak Hours

கிண்டி மற்றும் கே.கே.நகரில் இருந்து வரும் வாகனங்கள் அசோக் நகர் வந்த உடன் வழித்தடம் மாறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து சிக்னல் இல்லை. 1வது அவென்யூவில் இருந்து 100 அடி சாலையில் சேரும் வாகனங்களுக்கும் சிக்கல் ஏதும் இல்லை.

சிக்னல கானோம்

இதனால் பீக் ஹவர்களில் குறுக்கும் நெடுக்குமாக வாகன ஓட்டிகள் சென்று அவதிப்படுகின்றனர். எனவே சிக்னல் தேவைப்படும் இடங்களில் குறைந்தபட்சம் தற்காலிக ஏற்பாடுகளை ஆவது செய்ய வேண்டும்.

போக்குவரத்து காவலர்களை நிறுத்தலாம் போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இன்னும் ஏராளமான பகுதிகள் சிக்கலில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.