சாப்பிட்டிருந்தா சிக்கி செத்திருப்பேன்; இப்படித்தான் நடத்துவிங்களா? கொதித்த ஸ்விக்கி வாடிக்கையாளர்!

Bengaluru Swiggy
By Sumathi Jan 13, 2024 06:12 AM GMT
Report

ஷவர்மாவில் மெட்டல் துண்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷவர்மாவில் மெட்டல்

பெங்களூரை சேர்ந்த ஸ்டெர்லிங் க்ரைசஸ் என்ற வாடிக்கையாளர், ஸ்விக்கி தளத்தில் தான் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை Reddit தளத்தில் பதிவாக எழுதியுள்ளார்.

metal-piece-in-shawarma

அதில், பெங்களூரில் உள்ள நாகவாராவில் உள்ள அப்சல்யூட் ஷவர்மா உணவகத்தில் சிக்கன் ஷவர்மாவை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்த உடன் சாப்பிட தொடங்கியபோது, ஷவர்மாவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஃபிளேம் கிரில்லில் இருந்து ஒரு உலோகத் துண்டு இருந்துள்ளது.

கேம் விளையாட போறேன்; ஒரே இரவில் 80 ஆயிரத்திற்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்!

கேம் விளையாட போறேன்; ஒரே இரவில் 80 ஆயிரத்திற்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்!

அலட்சியம்

அதனைத் தொடர்ந்து, ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு முழுப் பணத்தையும் திரும்பக் கோரியுள்ளார். மேலும், ஸ்விக்கி மூலம் தான் மீண்டும் ஆர்டர் செய்யாமல் எனது வீட்டு வாசலில் ஒரு புதிய ஷவர்மா டெலிவரி செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

swiggy

இவருடைய கோரிக்கைகளுக்கு ஏற்காத, உணவு சுகாதார மீறலுக்கு மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, Swiggy வாடிக்கையாளர் சேவை நபர் அவர் ஆர்டர் செய்த ரூ.160க்கும் கட்டணத்தில் ரூ.50-ஐத் ரீபண்ட் அனுப்புவதாகக் கூறியுள்ளார். அதனையடுத்து, ஆத்திரமடைந்த அந்த நபர் இந்த ஷவர்மா-வை சாப்பிட்டு இருந்தால் இது தொண்டையில் சிக்கி இறந்திருப்பேன்.

நீங்க இப்படித் தான் உங்க வாடிக்கையாளர்களை நடத்துவீர்களா என திட்டியுள்ளார். இருப்பினும் இந்த புகார் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.