செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேக்கணும் - மத்திய அமைச்சருக்கு நீதிமன்றம் அதிரடி!
மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது.
ராமேஸ்வரம் கஃபே
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி மதியம் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.இந்த வெடிகுண்டு விபத்தில் உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் கஃபேவில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்கு வங்கத்தில் முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா உள்பட 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் ஷோபா, “குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தான்” என்று பேசினார். மேலும் டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள ‘மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர் என்றும் சர்ச்சைக்கருத்தை தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்
இவரின் பேச்சுக்கு எதிராக திமுக சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக பதிவு செய்யயப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சேனை உயர் நிதி மன்றத்தில் மனுத்தாக்கள் செய்து இருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கப்படும்" சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது.
அப்போது அமைச்சர் ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மன்னிப்பு கோரி பிராமண பாத்திரம் தாக்கல் செய்வதாக தெரிவித்த நிலையில் ,செய்தியாளர் சந்திப்பு நடத்தி பணிப்பு கோரினால் தான் சரியாக இருக்கும் என தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதி தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.