Thursday, Jul 3, 2025

மத்திய அமைச்சர் கார் மோதி விபத்து; பாஜக தொண்டர் உயிரிழப்பு- அதிர்ச்சி சம்பவம்!

BJP Bengaluru Death
By Swetha a year ago
Report

பெங்களூருவில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே காரில் இருசக்கர வாகனம் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்தார்.

அமைச்சர் கார்

கர்நாடக மாநிலம், பெங்களூரு, கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த பாஜக தொண்டரான பிரகாஷ் (35). இவர் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மத்திய அமைச்சர் கார் மோதி விபத்து; பாஜக தொண்டர் உயிரிழப்பு- அதிர்ச்சி சம்பவம்! | Bjp Worker Dies Crashing Into Union Ministers Car

இந்நிலையில், கே.ஆர்.புரம் விநாயகர் கோயில் அருகே சென்று பிரகாஷ் கொண்டிருந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் கார் கதவு திறந்திருந்தது. அப்போது அவரது இருசக்கர வாகனம் கதவு மீது மோதியதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி, காருக்குள் ஒளிந்திருந்த இர்பான் - விசாரணையில் அம்பலம்!

யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி, காருக்குள் ஒளிந்திருந்த இர்பான் - விசாரணையில் அம்பலம்!

தொண்டர் உயிரிழப்பு

அதே சமயத்தில் எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த தனியார் பேருந்து பிரகாஷ் மற்றும் அவரது மீது மோதியது. இதனால், படுகாயமடைந்து இருந்த பிரகாஷை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்தது சென்றனர்.

மத்திய அமைச்சர் கார் மோதி விபத்து; பாஜக தொண்டர் உயிரிழப்பு- அதிர்ச்சி சம்பவம்! | Bjp Worker Dies Crashing Into Union Ministers Car

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பிரகாஷின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் ஷோபா கரந்தலஜே, இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார்.