யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி, காருக்குள் ஒளிந்திருந்த இர்பான் - விசாரணையில் அம்பலம்!
பிரபல யூடியூபர் இர்பானின் கார் மூதாட்டி பலியானபோது அவர் காருக்குள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று மூதாட்டி பத்மாவதி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.

இச்சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பத்மாவதி என்ற மூதாட்டியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சொகுசு காரை ஓட்டியது அசாருதீன் என்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.
காருக்குள் இர்பான்
இந்நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், விபத்து நடந்த போது இர்பான் மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேர் காரில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவரது குடும்பத்தினருடன் அவர் மனைவியின் சொந்த ஊரான தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவரது கார் 110கி.மீ வேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர், விபத்து ஏற்படுத்தியதாக இவரது சொந்தக்காரர் அசாருதீன் என்பவர் கைதானார். அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    