அதிவேகமாக சென்ற யூடியூபர் இர்பானின் கார் - கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டி மீது மோதி விபத்து..!

Youtube Tamil Nadu Police
By Thahir May 26, 2023 01:21 PM GMT
Report

செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்பானின் பென்ஸ் கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இர்பான் கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று மூதாட்டி பத்மாவதி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.

YouTuber Irfan dies in car collision

இச்சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பத்மாவதி என்ற மூதாட்டியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்டதில் சொகுசு காரை ஓட்டியது அசாருதீன் என்பது தெரியவந்தது.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள பட்டதில் இந்த சொகுசு பென்ஸ் கார் பிரபல யூடியூபர் இர்பானுடையது என்பது தெரியவந்துள்ளது.