தொடர் வெற்றி - ஆப்பு வைக்க பார்க்கும் பெங்களூரு - சென்னை அணி Play - off வாய்ப்பிற்கு சிக்கல்?
பெங்களூரு அணி 12 போட்டிகளில் 5'இல் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு வெற்றி
தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த பெங்களூரு அணி, கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 241/7 ரன்களை குவித்தது.
விராட் 92(47), ரஜத் படிதர் 55(23), கேமரூன் கிறீன் 46(27) என அதிரடி காட்டினார். பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணியில் அதிகபட்சமாக ரூஸோவ் 61(27) ரன்களை எடுத்தார்.
சிக்கலில் சென்னை
60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் Run- rate +0.217. இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே பெங்களூரு அணிக்கு மிச்சமுள்ளது. அடுத்த ஆட்டங்களில் டெல்லி மற்றும் சென்னை அணிகளை பெங்களூரு சந்திக்கிறது.
இதில் இரண்டிலும் நல்ல வித்தியாசங்களில் வெற்றி பெறும் நிலையில், அந்த அணிக்கு Play Off வாய்ப்புகள் இன்னும் மிச்சமுள்ளது. அதாவது, அடுத்த 3 ஆட்டங்களில் சென்னை (குஜராத், ராஜஸ்தான், பெங்களூரு) ஆகிய அணிகளை சந்திக்கிறது. இதில் நிச்சயமாக இரண்டில் சென்னை தோற்றகவே வேண்டும்.
அதே போல, குஜராத் அணி தனது அடுத்த ஆட்டங்களில் தோல்வியோ அல்லது சொற்ப ரன்களில் மட்டுமே வெற்றிபெற்றாக வேண்டும்.
அப்படி நடக்கும் நிலையில், சென்னை - பெங்களூரு அணிகள் புள்ளிப்பட்டியலில் ஒரே பாயிண்டில் இருக்கும். Run Rate அடிப்படியில் ஒரு சின்ன வாய்ப்பிருப்பதாக பெங்களூரு அணி ரசிகர்கள் பெரிதாக நம்பிவருகிறார்கள்.