Strike rate விவகாரம்...அணியில் விளையாட அடம் பிடித்தேனா? வெளிப்படையாக பேசிய விராட் கோலி.
தன் மீதான குற்றச்சாட்டுகளை தான் மறுக்கவில்லை என வெளிப்படையாக பேசியுள்ளார் விராட் கோலி.
விராட்
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, உலக டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்ததை பலரும் விமர்சித்தார்கள். காரணம், அவரின் மெதுவமான ஆட்டம்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான Strike Rate'இல் விராட் கோலி விளையாடி வருவதாக பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும்படி, நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் 47 பந்துகளில் 7 ஃபோர், 6 சிக்ஸர்களுடன் 92 ரன்களை விளாசி அவுட்டாகினர்.
பிடிவாதம்
நேற்றைய போட்டியில் அவரின் Strike Rate 195.74. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தது.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேட்டியளித்த விராட், தான் இப்படித்தான் விளையாடுவேன் என பிடிவாதம் பிடிக்கும் நபர் அல்ல எனக் கூறி, தன்னை எங்கெல்லாம் முன்னேற்றிக் கொள்ள வேண்டுமோ? அதில் நிச்சயமாக முன்னேற்றிக் கொள்வதாக உறுதிபட தெரிவித்தார்.
அணிக்காகவும் தனக்காகவும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என தான் நினைப்பதாக குறிப்பிட்ட விராட், இத்தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து தோல்விகளுக்கு பிறகு சுயமரியாதைக்காக விளையாட நினைத்ததாக கூறி, ரசிகர்களை ஏமாற்றாதவாறு விளையாட வேண்டும் என முடிவு இருப்பதாக கூறினார்.