மெதுவாக விளையாடிய விராட் - அவரு சோடா பாட்டில்!! அடித்து ஆட முடியாதா? கடுப்பான வீரர்!
நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு வெற்றி
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பெங்களுரு அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்களும், டுபிளேஸிஸ் 12 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதர் 50 (20), கேமரூன் கிரீன் 37(20) ஆகியோரின் அதிரடியின் காரணமாக 20 ஓவர்களில் 206/7 ரன்களை குவித்தது.
எப்படியும் இந்த இலக்கை ஹைதராபாத் அணி எட்டிவிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அபாயமான ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் முதல் ஓவரிலேயே 1(3) ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து சிறுது நேரம் அதிரடி காட்டிய அபிஷேக் வரம்வர்மா 31(13) வெளியேற, தொடர்ந்து சீரான இடைவேளையில் விக்கெட் இழந்தது. ஷ்ஹபாஸ் அகமது மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் இருவர் மட்டுமே தாக்குப்பிடித்து 40(37) மற்றும் 31(15) ரன்களை எடுத்து அவுட்டாகினார்.
அடித்து ஆட முடியாதா..?
இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 171/8 ரன்களை மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் விராட் 51(43) ரன்களை எடுத்தார்.
ஆனால், அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. டி20 உலகக்கோப்பை நெருங்கியுள்ள நிலையில், விராட் இப்படி ஸ்லொ ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கும் வருத்தம் தான்.
ஆனால், தொடரின் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு கேப் விராட் கைவசம் தான் உள்ளது. நேற்று விராட் விளையாடியதை முன்னாள் வீரர் கவாஸ்கர் பெரும் விமர்சனங்கள் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, கோலியிடம் இருந்து வெறும் சிங்கிள் மட்டுமே கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக, தினேஷ் கார்த்திக், மஹிபால் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது, கோலி சில ஷாட்களை அடித்திருக்க வேண்டும். நிறைய பந்துகளை கோலி தவற விட்டார். திடீரென சில பந்துகளை அடிக்க நினைத்தால் சரியாக ஆட முடியாது என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
Virat Kohli is like a soda bottle. A pop when it opens and then fizzles out!
— Jeet Vachharajani? (@Jeetv27) April 25, 2024
ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார். காரணம், அனைவருமே உலககோப்பையில் விராட்'டின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது என்பதால் தான்.
சமூகவலைத்தளவாசி ஒருவர் விராட்டை சோடா பாட்டில் என கடுமையாக சாடி, மூடி இருக்கும் போது கொந்தளிக்கும் திறந்தால் வெறுமே போய்விடும் என சாடியுள்ளார்.