2013-ஆம் ஆண்டில் இருந்த பழக்கம் - விராட் கோலியுடன் நெருக்கம் காட்டிய ரோகித் மனைவி
கடந்த 2015-ஆம் ஆண்டு ரோகித் சர்மாவை மணந்து கொண்டார் ரோகித் சர்மா
ரோகித் சர்மா
இந்தியா அணியின் தற்போதைய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன், ஒரு நாள் போட்டிகளில் 3 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என பல சிறப்புகளை கொண்டுள்ளார் ரோகித் சர்மா.
உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் தனக்கென தனி அடையாளத்தை உண்டாகியிருக்கும் ரோகித் சர்மா, பெரும் ரசிகர்கள் கூட்டத்தையும் கொண்டுள்ளார்.
மும்பை அணியின் கேப்டனாக இருந்து அவர் மாற்றப்பட்டதற்கு அணி நிர்வாகம் மற்றும் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா பெரும் விமர்சனங்களே அவரின் ரசிகர் பட்டாளத்திற்கான சாட்சி.
நெருக்கம்
ரோகித் சர்மா கடந்த 2015-ஆம் ஆண்டு ரித்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரோகித் சர்மா விளையாடும் போதெல்லாம் ரித்திகாவை மைதானத்தில் நம்மால் காணமுடியும்.
இந்த தம்பதிக்கு 2018-ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. இவர்களது திருமணம் பந்தம் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், திருமணத்திற்கு முன்னர் விராட் கோலியுடன் ரித்திகா நெருக்கம் காட்டினார் என அவ்வப்போது செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
அவர்கள் இருவருக்குள் நெருக்கம் இருந்தது தான். ஆனால், அது தவறான வழியில் இல்லை. விராட் கோலியின் மேனேஜராக இருந்துள்ளார் ரித்திகா. அதே போல, ரித்திகாவின் சகோதரர் பண்டி சஜ்தே விராட் கோலியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும் அவரின் முன்னாள் மேலாளராகவும் இருந்துள்ளார்.
இந்த காரணமாக அப்போது விராட் ரித்திகா இருவருக்கும் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.