ரகசியமாக கையெழுத்தான contract!! PBKS அணியில் ரோகித் சர்மா - சூசகம் சொன்ன ப்ரீத்தி ஜிந்தா
மும்பை அணியில் இருந்து முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா விளக்கவுள்ளார் என தொடர்ந்து கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது.
ரோகித் சர்மா
கேப்டனாக இருந்து ரோகித் சர்மா தற்போது MI அணியின் ஓப்பனராக மட்டுமே செயல்படுகிறார். அவருக்காக அவரது ரசிகர்கள் ஹர்டிக் பாண்டியாவை கடுமையாக விமர்சிப்பது போன்ற செய்திகள், இவர்களுக்கு பிரச்சனை, அந்த விஷயத்தை கவனித்தீர்களா..? என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக்கொண்டே தான் இருக்கின்றன.
இருப்பினும் வெற்றி பாதைக்கு மட்டுமே திரும்பும் நோக்கை கொண்டுள்ளது மும்பை அணி. இது வரை விளையாடிய 7'இல் 3'இல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி நாளை புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பலமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த சூழலில் தான், மும்பை அணியில் இருந்து வெளியேறும் ரோகித் சர்மா, பஞ்சாப் அணியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் வைரலானது. இது குறித்து பல வகையான கருத்துக்கள் வெளியான நிலையில், அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
#போலி செய்திகள்! இந்தக் கட்டுரைகள் அனைத்தும் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை. நான் ரோஹித் ஷர்மாவை மிகவும் மதிக்கிறேன் & அவருடைய தீவிர ரசிகன், ஆனால் நான் அவரை எந்த நேர்காணலிலும் விவாதிக்கவில்லை அல்லது இந்த அறிக்கையை வெளியிடவில்லை! ஷிகர் தவான் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு & அவர் தற்போது காயமடைந்திருப்பதால், இந்தக் கட்டுரைகள் மிகவும் மோசமான ரசனையில் வெளிவருகின்றன.
எந்தச் சரிபார்ப்பும் இன்றி தவறான தகவல்கள் எடுக்கப்பட்டு ஆன்லைனில் பரப்பப்படுகின்றன என்பதற்கு இந்தக் கட்டுரைகள் சிறந்த எடுத்துக்காட்டு. அனைத்து ஊடகங்களும் இதைப் பரப்புவதைத் தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட தரப்பினரை சங்கடப்படுத்துவதையும் தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
#Fakenews ! All these articles are completely fake & baseless. I hold Rohit Sharma in very high regard & am a big fan of his, but I have NEVER DISCUSSED him in any interview nor made this STATEMENT ! I also have a lot of respect for Shikhar Dhawan & he being currently injured ,… pic.twitter.com/VYbyV4eqHU
— Preity G Zinta (@realpreityzinta) April 19, 2024
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்களிடம் தற்போது ஒரு சிறந்த அணி உள்ளது & எங்கள் ஒரே கவனம் கேம்களை வெல்வது மற்றும் #IPL2024 ஐ அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நன்றி.