65 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி தீவு; கார்களுக்கு அனுமதியில்லை - எங்கு உள்ளது தெரியுமா?
வெறும் 65 நபர்கள் மட்டுமே வசித்து வரும் ஹெர்ம் தீவு குறித்த தகவல்.
ஹெர்ம் தீவு
இங்கிலாந்து நாட்டில் சுமார் 1.35 மைல் நீளமுள்ள ஹெர்ம் என்ற தீவு உள்ளது. இங்கு வெறும் 65 நபர்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். இந்த தீவில் ஒரே ஒரு ஹோட்டல்தான் உள்ளது.
அந்த ஹோட்டலில் டிவியோ, போனோ, கடிகாரமோ கிடையாது. இந்த தீவில் விடுமுறையைக் கொண்டாடும் வகையில் காடேஜ்களும் கேம்ப் அமைக்கும் இடங்களும் உள்ளது.
அதேபோல் இங்கு 2 பப்கள், ஒரு தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் மற்றும் ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளது. அந்தப் பள்ளியில் வெறும் 4 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள்.
சுற்றுலா
இங்கிலீஷ் கால்வாயில் அமைந்துள்ள ஹெர்ம் தீவிற்கு கார்களில் செல்ல முடியாது. இங்கு செல்ல வேண்டுமென்றால் குர்ன்சேயிலிருந்து 15 நிமிடம் படகில் பயணம் செய்ய வேண்டும் அல்லது லண்டன் கேட்விக்கிலிருந்து விமானம் மூலமும் செல்லலாம்.
ஹெர்ம் தீவில் பல வகையான உணவுகள் கிடைக்கின்றன. இதனால் இங்கு சுற்றுலா செல்பவர்கள் உணவு கிடைக்குமோ என பயப்படத் தேவையில்லை. வித்தியாசமான இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தால் ஹெர்ம் தீவு சரியானதாக இருக்கும்.
இந்த தீவில் டால்பின்களை அதிகமாக பார்க்கலாம். வெள்ளை நிற மண்ணில் தெள்ளத் தெளிவான நீல நிறத்தில் கடல் நீரை பார்க்கவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். கடற்கரையின் அழகை ரசித்துக் கொண்டு குடும்பத்தோடு இங்கு சுற்றுலா கொண்டாடலாம்.