சில ஆண்டுகளில் நீரில் மூழ்கப்போகும் தீவு - மக்களின் நிலை? ஆய்வில் அதிர்ச்சி!
பருவநிலை மற்றும் காலநிலை மாற்றம் பூதாகரமாக வெடித்து வருகிறது.
பருவநிலை
பசிபிக் பெருங்கடல் பகுதியில் துவாலு தீவு அமைந்துள்ளது. பிஜி தீவில் இருந்து வடக்கு திசையில் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவு உள்ளது. 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தீவில், 11,900 மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 3500 சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்கு சுற்றுச்சூழல் மாறுபாடு மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் 50 ஆண்டுகளுக்குள் துவாலு தீவு கடலில் மூழ்கி மாயமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மூழ்கும் அபாயம்
எனவே, அது சார்ந்த பகுதிகள் கடலில் மூழ்காமல் இருக்க தேவையான நடவடிக்கையை அந்நாடு மேற்கொண்டு வருகிறது. இதனால் 2100 அடி வரையில் கடல்நீர்மட்டம் உயர்ந்தாலும் தீவு பாதிக்காமல் இருக்கும் என கருதப்படுகிறது.
இதற்கிடையில் சுனாமி ஏற்பட்டால் நிலைமை மோசமாக மாறலாம் எனவும் கூறப்படுகிறது.