இதுவரை பார்த்ததில்லை; ரயில் போக்குவரத்து இல்லாத பிரபல நாடுகள் - எதெல்லாம் தெரியுமா?
ரயில் போக்குவரத்து இல்லாமல் 27 நாடுகள் உள்ளன.
ரயில் போக்குவரத்து
ரயில்வே என்பது உலகின் மிகப் பழமையான போக்குவரத்து. கிமு 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. நூற்றுக்கணக்கான நாடுகளில் ரயில்வே நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டாலும், ரயில் போக்குவரத்து இல்லாத சில நாடுகள் உள்ளன.
அதன்படி சுமார் 27 நாடுகள் ரயில் போக்குவரத்து இல்லாமல் இயங்கி வருகிறது. இதன் முக்கிய காரணமாக கட்டுமானத்திற்கான நிதி பற்றாக்குறை. எண்ணெய் வளம் மிக்க குவைத் போன்ற நாடுகளில், போக்குவரத்தில் சாலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன,
எனவே ரயில் பாதை அமைப்பதற்கான அவசியம் இல்லை எனக் கருதப்படுகிறது.
27 நாடுகள்
அன்டோரா, பூட்டான், சைப்ரஸ், கிழக்கு திமோர், கினியா-பிசாவ், ஐஸ்லாந்து, குவைத், கிப்யா, மக்காவ், மால்டா, மார்ஷல் தீவுகள், மொரீஷியஸ், மைக்ரோனேசியா, நைஜர், ஓமன், பப்புவா நியூ கினி, கத்தார், ருவாண்டா, சான் மரினோ, சாலமன் தீவுகள், சோமாலியா, சுரினாம், டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துவாலு, வனுவாடு, ஏமன் போன்ற நாடுகள் ரயில் போக்குவரத்து இல்லாத நாடுகளாக அறியப்படுகிறது.
கடினமான புவியியல் நிலைமைகள் காரணமாக பல நாடுகளில் ரயில் வலையமைப்பை உருவாக்க முடியவில்லை.