இது லிஸ்ட்லயே இல்லையே; 2 கி.மீ ரயில் தண்டவாளம் திருட்டு - பகீர் சம்பவம்!

Crime Bihar
By Sumathi 1 மாதம் முன்

ரயில் தண்டவாளம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாளம்

பீகார், சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பந்தவூல் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் என்ற சர்க்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது. இந்த சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை.

இது லிஸ்ட்லயே இல்லையே; 2 கி.மீ ரயில் தண்டவாளம் திருட்டு - பகீர் சம்பவம்! | Railway Track Length Of 2 Kms Stolen In Bihar

எனவே, இந்த ரயில் பாதையில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், சுமார் இரண்டு கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இந்த விஷயமானது கடந்த ஜனவரி 24ஆம் தேதிதான் அம்பலமாகியுள்ளது.

திருட்டு 

இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே நிர்வாகம் இரு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவு விடுத்துள்ளது.

மேலும், இதில் ரயில்வே ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.