T20 World Cup: ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பில்லை - பாரபட்சம் காட்டும் பிசிசிஐ?

Cricket Indian Cricket Team Sports T20 World Cup 2024
By Jiyath May 01, 2024 02:30 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் பத்ரிநாத் பேசியுள்ளார்.

இந்திய அணி 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.

T20 World Cup: ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பில்லை - பாரபட்சம் காட்டும் பிசிசிஐ? | Bcci Biased Against Tamilnadu Players Badrinath

இதில் ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், மாற்று வீரர்களாக சுப்மான் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், ஒரு தமிழக வீரர் கூட அணியில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அந்த தமிழக வீரரை இனி யாரும் வாங்க மாட்டாங்க; என்ன பன்றாரு அவரு? கடுப்பான சேவாக்!

அந்த தமிழக வீரரை இனி யாரும் வாங்க மாட்டாங்க; என்ன பன்றாரு அவரு? கடுப்பான சேவாக்!

பத்ரிநாத் ஆதங்கம் 

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் பத்ரிநாத் பேசியுள்ளார்.

T20 World Cup: ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பில்லை - பாரபட்சம் காட்டும் பிசிசிஐ? | Bcci Biased Against Tamilnadu Players Badrinath

அவர் கூடியதாவது "தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருமடங்கு சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் கொடுப்போம் என்ற பாரபட்சம் ஏன்? டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பிற மாநில வீரர்களைப் போல தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஏன் கூடுதல் ஆதரவு கிடைப்பதில்லை? இந்த சூழலை பலமுறை நான் எதிர்கொண்டுள்ளேன். இதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை என்பதால் நான் பேசுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.