டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Cricket Sports T20 World Cup 2024
By Jiyath Apr 30, 2024 10:44 AM GMT
Report

டி20 உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியல் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

உலகக்கோப்பை 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தொடங்கி 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்திருந்தது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! | Bcci Announced T20 World Cup India Squad

இதனிடையே இந்திய அணி தேர்வு தொடர்பாக சமீபத்தில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த தமிழக வீரரை இனி யாரும் வாங்க மாட்டாங்க; என்ன பன்றாரு அவரு? கடுப்பான சேவாக்!

அந்த தமிழக வீரரை இனி யாரும் வாங்க மாட்டாங்க; என்ன பன்றாரு அவரு? கடுப்பான சேவாக்!

இந்திய வீரர்கள் 

அதில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ்,

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! | Bcci Announced T20 World Cup India Squad

யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், மாற்று வீரர்களாக சுப்மான் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.