விஜய்க்கு அந்த பிரபலத்தின் மகள் மேல்தான் ஆசை; இடையில் வந்த சங்கீதா - பகீர் கிளப்பிய பிரபலம்!
விஜய் திருமணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் லியோ திரப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், விஜய்க்கும் மனைவி சங்கீதாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்,
திருமணம்
”விஜய் தனது மனைவி சங்கீதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன், விஜய் வேறு நட்சத்திர மகளை திருமணம் செய்து கொள்ள நினைத்தார். ஆனால் சங்கீதா வந்த பிறகு அவர் அதை ரத்து செய்தார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா இருவரும் தங்கள் மகனுக்கு பின்னணி பாடகர் சுரேந்தரின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தனர்.
ஷோபாவின் சகோதரர் சுரேந்தர். சுரேந்தரின் மகள் உறவுமுறை விஜய்யின் மருமகள். அதனால் தான் விஜய்யின் பெற்றோர் இப்படி ஒரு திருமணம் செய்ய நினைத்தனர். ஆனால் எல்லாம் மாறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video