Tuesday, May 20, 2025

மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து - முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்!

Vijay Sangeetha Vijay Janany Leo
By Sumathi 2 years ago
Report

விவாகரத்து வதந்திக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விவாகரத்து வதந்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

sangeetha vijay

இந்நிலையில், விஜய் பற்றிய செய்திகள் அண்மை காலமாக இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து வதந்தி காட்டுத் தீ போல் பரவியது.

ஜனனி தகவல் 

இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதன்பின் லியோவில் த்ரிஷாவுடன் நீண்ட வருடங்களுக்குப் பின் நடித்தார். அதில் லிப்லாக் சீன் இடம்பெற்றிருந்தது.

janany about vijay

எனவே அவருடன் நெருக்கம், டேட்டிங் என்றெல்லாம் பேசப்பட்டது. இதுவே விஜயின் விவாகரத்திற்கு காரணமாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், லியோவில் நடித்துள்ள ஜனனி அளித்த பேட்டி ஒன்றில்,

விஜய்-சங்கீதா திருமண நாள்; த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் - அப்போ அது உண்மையா?

விஜய்-சங்கீதா திருமண நாள்; த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் - அப்போ அது உண்மையா?

செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும் போது, தனது பேச்சை பார்த்து விட்டு, என் வைஃப் அவரோட சிஸ்டர்ஸ் மாதிரியே பேசுறீங்க. என் வைஃப்பும் ஜாஃப்னா தான் தெரியுமா? என்றார். செம சைலன்ட்டாக இருப்பார். ரொம்ப அமைதியா பேசுவார்.

அடடா என்னைப் போலவே என்னோட தளபதியும் இருக்காரே என நினைச்சு ரொம்பவே ஜாலியா இருந்துச்சு எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மூலம் விஜய் தனது மனைவியை குறித்து பேசியிருப்பதால் விவாகரத்து என்ற செய்தியெல்லாம் வதந்தி என தெரியவருகிறது. 

You May Like This Video