வரலட்சுமியுடன் திருமணம்; நிக்கோலாயின் பிளானே இதுதான் - போட்டுடைத்த பிரபலம்!
வரலட்சுமி திருமணம் குறித்த தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
வரலட்சுமி திருமணம்
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி(39). இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தற்போது அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடக்கிறது. இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். தொடர்ந்து, திருமண வரவேற்பு சென்னையில் நடக்கவுள்ளது.
நிக்கோலாய் பிளான்
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், "வரலட்சுமியைவிடவும் நிக்கோலாய் சச்தேவ் கோடீஸ்வரர். அவருக்கு மும்பையில் தெரியாத நடிகர், நடிகைகள், தொழிலதிபர்களே கிடையாது.
அவர் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார். அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடக்கிறது. அதற்கு காரணம் நிக்கோலாய்தான்.
ஏனெனில் தன்னுடைய திருமணம் பிரமாண்டமாக நடக்க வேண்டும். அனைவரும் பார்த்து வாயை பிளக்க வேண்டும் என்ற பிளானில்தான் அவர் இதனை செய்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.