ஆன்மீக புரட்சியாளர்.. பங்காரு அடிகள் திடீரென மாரடைப்பால் காலமானார் - அதிர்ச்சி!
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்காரு அடிகள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை வைத்து அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தி வந்தார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர்,
மேலும், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தியும் ஆன்மீகப் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். இவரது ஆன்மீகச் சேவையைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.
காலமானார்
இந்நிலையில், இவர் ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இன்று மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்துள்ளார். காலமான பங்காரு அடிகளாருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர்.
அவர்களால், 'அம்மா' சென்று அழைக்கப்பட்டு வந்தார், அவரது மறைவு ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், டிடிவி தினகரன், எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.