ஆசனவாயில் காற்று செலுத்தி விபரீத விளையாட்டு - குடல் வெடித்து இளைஞர் மரணம்!

Bengaluru Death
By Sumathi Mar 30, 2024 06:36 AM GMT
Report

ஆசனவாயில் காற்று பிடித்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

 விளையாடிய நண்பன்

கர்நாடகா, விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஷ் (28). பெங்களூருவில் தங்கி டெலிவரி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.

யோகேஷ் - முரளி

இவர் தனது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பைக் சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ்க்கு விட்டுள்ளார். அங்கு இவரது நண்பன் முரளி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

ஆசனவாயில் மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர் - தொடரும் லாக்-அப் கொடூரங்கள்!

ஆசனவாயில் மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர் - தொடரும் லாக்-அப் கொடூரங்கள்!

இளைஞர் பலி

இந்நிலையில், சர்வீஸ் சென்டரில் இருந்த ஏர் பிரஷர் பைப்பை எடுத்து இருவரும் விளையாடத் தொடங்கியுள்ளனர். இதில் முரளி முதலில் யோகேஷ் முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் காற்று அடித்து விளையாடிய அவர்,

ஆசனவாயில் காற்று செலுத்தி விபரீத விளையாட்டு - குடல் வெடித்து இளைஞர் மரணம்! | Bangalore Man Dies Friend Directs Air At Rectum

ஒரு கட்டத்தில் ஆசனவாயில் உயர் அழுத்த காற்றை செலுத்தியுள்ளார். இதில் ஆசன வாய் மூலமாகக் காற்று உள்ளே சென்று, யோகேஷ் வயிறு பெரிதாக மாறி, குடல் வெடித்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே யோகேஷ் உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முரளியைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.