ஆசனவாயில் சிக்கிய தண்ணீர் பாட்டில்... அதிர்ந்த மருத்துவர்கள்! நடந்தது என்ன?
உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ஆசனவாயில் 19 சென்டிமீட்டர் நீளமுள்ள தண்ணீர் பாட்டில் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசித்திர சம்பவம்
ஈரான் நாட்டை சேர்ந்த ஒருவர் பசியின்மை, மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார். இதுகுறித்து தன் மனைவியிடம் சொல்லத் தயங்கியவர், மூன்று நாள்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை இமாம் கொமேனி என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவரின் மனைவி. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ஆசனவாயில் 19 சென்டிமீட்டர் நீளமுள்ள தண்ணீர் பாட்டில் சிக்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மருத்துவர்கள் அதிர்ச்சி
பாட்டிலை வெளியே எடுக்க மருத்துவர்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர். அந்த நபரின் குடல் பகுதிவரை பாட்டில் சென்றிருந்தது. உரிய சிகிச்சையளித்து கவனமாகவும் மெதுவாகவும் அந்த பாட்டிலை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
பாட்டில் உடையாமலும், ரத்தப்போக்கு ஏற்படாமலும் பாதுகாப்பாக அந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த நபருக்கு உள் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உளவியல்
அவர் தனது ஆசனவாயில் பாட்டிலைச் செருகியதற்கான காரணத்தைக் கூற மறுத்திருக்கிறார். பாலியல் ரீதியான சுய விருப்பத்துக்காக அவர் இதுபோன்ற காரியத்தைச் செய்திருக்கலாம் என மருத்துவர்கள் யூகிக்கின்றனர்.
மூன்று தினங்களுக்குப் பிறகு, அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பின்னர், மனநல மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். அங்கு உளவியல் ரீதியான சிகிச்சைக்குப் பின்னர், அவர் அவ்வாறு செய்ததற்கான காரணம் தெரிய வரலாம் என்று கூறப்படுகிறது.
எத்தனையோ வித்தியாசமான நோயாளிகளைப் பார்த்துப் பழக்கப்பட்ட மருத்துவர்களையே திடுக்கிட வைத்துள்ளது இந்த சம்பவம்.