ஆசனவாயில் மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர் - தொடரும் லாக்-அப் கொடூரங்கள்!

Attempted Murder Uttar Pradesh Crime
By Sumathi Jun 06, 2022 10:05 PM GMT
Report

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக கைதி

உத்தரப்பிரதேசம் கக்ரலா பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் பகுதி நேரமாக காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த மே 2 ம் தேதி விசாரணைக்காக ஆலபூர் காவல்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர்.

ஆசனவாயில் மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர் - தொடரும் லாக்-அப் கொடூரங்கள்! | Police Inserted Gave Shock Treatment To The Youth

பசுவதையில் தொடர்ந்து ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு உள்ள ரவுடியுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இளைஞரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

 லாக்-அப் சித்ரவதை

இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில் அவரை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். ரவுடி குறித்து கேள்வி எழுப்பிய காவல்துறையினர் இரவு முழுவதும் வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

ஆசனவாயில் மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர் - தொடரும் லாக்-அப் கொடூரங்கள்! | Police Inserted Gave Shock Treatment To The Youth

கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து, தாங்கள் கைது செய்தது தவறான நபர் என்பதை அறிந்த காவல்துறையினர் அந்த இளைஞருக்கு 100 ரூபாயை கையில் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு வந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை மிகவும் மோசமடையவே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையின் போது இளைஞரின் ஆசனவாயில் லத்தியை சொருகி, அவ்வபோது மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததாகவும் அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரவீன் சிங் சவுகான் இளைஞர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும், அவரது ஆசனவாயில் லத்தியை நுழைத்து சித்ரவதை செய்ததாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியது உண்மைதான் என்றும்,

இச்சம்பத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும். அதே சமயத்தில் இளைஞருக்குத் தேவையான தரமான சிகிச்சை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

எஸ்எஸ்பி ஓபி சிங் தாதாகஞ்ச் சிஓ ப்ரேம் குமார் தாப்பா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். காவல்துறை துணை ஆய்வாளர் சத்யபால் உள்ளிட்ட காவலர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 8342 மற்றும் 323 உள்ளிட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.