கொட்டித்தீர்த்த கனமழை; பெங்களூரில் குளமான சாலைகள் - விமான சேவை பாதிப்பு!
பெங்களூரில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை வாய்ப்பு
பெங்களூரில் கோடைக் காலம் ஆரம்பித்ததும் வெயில் வாட்டியது. தொடர்ந்து வெயிலின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வானிலை மொத்தமாக மாறி அங்கு கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, பெய்த கனமழையால் நகர் முழுவதும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மஞ்சள் அலர்ட்
குறிப்பாகப் பெங்களூர் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலை மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியதால், பயணிகள் ஏர்போர்ட் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், மோசமான வானிலை நிலவி நிலையில், பெங்களூர் ஏர்போர்ட்டில் தரையிறங்க முடியாத 14 விமானங்கள் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டன.
பின் சற்று வானிலை சீரான நிலையில், 14 விமானங்களும் மீண்டும் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
இதற்கிடையில், வரும் நாட்களில் மழை தொடரும் என்பதால் அங்கு மஞ்சள் அவர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.