தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் சில பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் கன மழை பெய்யும் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. அதோடு புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ,சேலம் ,தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, வேலூர் ,திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை ,நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.