அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை - எங்கெல்லாம் தெரியுமா?
அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை நிலையம் கூறியுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிகடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமக தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோயம்புத்துர், திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களிகலும், கடலூர், சென்னை,புதுச்சேரி போன்ற வட மாவட்டங்களிலும் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வானிலை அறிவிப்பு
கேரள கடலோரப்பகுதிகள்,லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தின் ஒரிரு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான பனிமூட்டத்திற்க்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் வெப்பநிலை குறைந்தப்பட்சமக 21டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.