பங்காரு அடிகளார் உடல் சித்தர் முறைப்படி, அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

Tamil nadu
By Vinothini Oct 20, 2023 01:30 PM GMT
Report

மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பங்காரு அடிகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை வைத்து அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தி வந்தார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர்.

bangaru-adigal-funeral-final-ceremony

மேலும், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தியும் ஆன்மீகப் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். இவரது ஆன்மீகச் சேவையைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.

பங்காரு அடிகளார் மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பங்காரு அடிகளார் மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நல்லடக்கம்

இந்நிலையில், இவர் நேற்று மாரடைப்பால் உயிர் பிரிந்தார், இவரது உடல் இன்று மாலை 5 மணியளவில் பங்காரு அடிகளார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, எம்.பி.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

bangaru adigal funeral

பின்னர், ஓம் சக்தி பராசக்தி என பக்தர்கள் முழுங்க பங்காரு அடிகளாரின் உடல், சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு 6 மூலிகைகள் மற்றும் பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

bangaru adigal funeral

மேலும், இவரது உடல் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.