கூல் லிப், குட்கா, புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை? நீதிமன்றம் காட்டம்!

Tamil nadu
By Sumathi Oct 05, 2024 04:17 AM GMT
Report

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்கள்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களை விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்று வருகிறது.

cool lip

இதில் ஜாமீன், முன் ஜாமீன் கோரி தாக்கலான மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தமிழகத்தில் கூல் லிப், குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் தடை செய்துள்ளது.

இருந்தபோதும் அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்காக சட்ட விரோதமாக கொண்டு வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன்,

வித விதமா சிகரெட் வகை..அல்லேக்கா தூக்கிய காவல்துறை..

வித விதமா சிகரெட் வகை..அல்லேக்கா தூக்கிய காவல்துறை..


நிரந்தர தடை?

குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் வாதிட்டனர். தொடர்ந்து, கூல் லிப், குட்கா வகை பொருட்கள் வேறு மாநிலங்களில் அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் எந்த தயாரிப்புக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும், இவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து வருவதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

கூல் லிப், குட்கா, புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை? நீதிமன்றம் காட்டம்! | Ban On Cool Lip Gutka And Tobacco In Tamilnadu

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது எவ்வாறு குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்களோ அதே போல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை முற்றிலும் தடை செய்ய முடியும்.

எனவே இந்த நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் போதைப் பொருட்களை தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளை பிறப்பிக்க உள்ளதாக கூறி வழக்கை ஒத்துவைத்துள்ளார்.