வித விதமா சிகரெட் வகை..அல்லேக்கா தூக்கிய காவல்துறை..

Police Seized Cigarettes
By Thahir Aug 02, 2021 09:36 PM GMT
Report

வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் சுமார் ரூ1 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வித விதமா சிகரெட் வகை..அல்லேக்கா தூக்கிய காவல்துறை.. | Cigarettes Seized Police

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்கப்படுகிறதா என கண்காணிக்க தனிப்படை அமைத்துள்ளார். அதில் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் வாணியம்பாடி முகமது அலி பஜார், கணியம்பாடி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது விமல் ஸ்டோர் உரிமையாளர் கோவாராம், தனலட்சுமி ஸ்டோர் உரிமையாளர் ஷாந்தியால், ஜெயலட்சுமி ஸ்டோர் உரிமையாளர் ஜிதியேந்தர், நிர்மல் ஸ்டோர் உரிமையாளர் கோபால் ராம் ஆகியோர் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் அனுமதி பெறாமல் விற்கப்பட்டு வந்த போலி சிகரெட்டுகள் மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் மதிப்பிலான சிகரெட்டு களையும் பறிமுதல் செய்து 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வித விதமா சிகரெட் வகை..அல்லேக்கா தூக்கிய காவல்துறை.. | Cigarettes Seized Police