CSK வீரருடன் காதல்? கதறி அழுதேன் - உண்மை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
CSK வீரரை காதலிப்பதாக பரவிய தகவல் குறித்து நடிகை நேஹா விளக்கமளித்துள்ளார்.
நடிகை நேஹா
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நேஹா. இந்த சீரியலில் இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரனாவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக நேஹா, பதிரனா குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஸ்டேட்டஸ் வைத்து வந்தார்.
தற்போது, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ள நேஹா, “எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை. ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அருகில் இருந்தவர் சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தான் பதிரனா பற்றி என்னிடம் கூறினார்.
CSK வீரருடன் காதல்?
அவர் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை நானும் எனது ஸ்டோரியில் பதிவிட்டேன். நான் போட்ட அந்த பதிவுக்கு பின்னர் பதிரனாவை நான் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவ தொடங்கின. அதைக் கேட்கும் போது எனக்கும் ஜாலியாக இருந்ததால் நானும் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
ஆனால் உண்மையில் பதிரனாவை நான் நேரில் கூட பார்த்தது இல்லை. அதேபோல் நிஜ வாழ்க்கையில் நான் ஒருமுறை மட்டும் காதல் தோல்வியை சந்தித்திருக்கிறேன். அந்த காதல் தோல்வியால் நான் கண்ணீர்விட்டு அழுதேன் எனத் தெரிவித்துள்ளார்.