இனி IPL விளையாட வாய்ப்பே இல்லையா..? CSK வீரருக்கு வந்த சோதனை..?
கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் நட்சத்திர ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு அறிவித்தார்.
அம்பத்தி ராயுடு
5-வது முறையாக க்ஸ்க் அணி கடந்த ஆண்டு கோப்பையை வென்றதும் CSK அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு தனது ஓய்வை அறிவித்தார். CSK அணி சாம்பியனான 2018,2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டவர் அம்பத்தி ராயுடு.
தற்போது அவர் MI Emirates அணிக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லீக்கில் விளையாடி வருகிறார். BCCI'யின் விதிகளின் படி, இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் வெளிநாட்டு லீக்களில் விளையாட மட்டும் முடியும். அம்பத்தி ராயுடு இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது மீண்டும் விளையாடினாலும், அவர் ஐபிஎல்லில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு முற்றிலும் சாத்தியம் இல்லை.
8 நாளில்....
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2023 சீசனில் விளையாடிய ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதானுக்குப் அதற்கு பிறகு, இந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லீக்கில் விளையாடும் மூன்றாவது இந்திய வீரர் அம்பத்தி ராயுடு ஆவார்.
மேலும், ILT - 20, 2024 கிரிக்கெட்டில் விளையாடும் ஒரே வீரர் ராயுடு ஆவார்.
அம்பத்தி ராயுடு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எட்டு நாட்களிலே அக்கட்சியில் இருந்து விலகினார்.பின்னர் துபாயில் ஐஎல்டி20-ல் விளையாட இருப்பதால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.