12 ஆண்களிடம் உல்லாசம்; ஹனிடிராப் முறையில் பல லட்சம் பறித்த இளம் பெண் - பகீர் சம்பவம்!

Karnataka India Bengaluru Crime
By Jiyath Aug 17, 2023 01:38 PM GMT
Report

ஹனிடிராப் முறையில் ஆண்களிடம் பல லட்சம் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹனிடிராப் மோசடி

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் 'ஹனிடிராப் முறையில் தன்னை மிரட்டி இளம்பெண் ஒருவர் உட்பட 4 பேர் பல லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக தெரிவித்துள்ளார்.

12 ஆண்களிடம் உல்லாசம்; ஹனிடிராப் முறையில் பல லட்சம் பறித்த இளம் பெண் - பகீர் சம்பவம்! | Honeytrap Case Model Neha Meher Arrested I

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து அந்த கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அந்த கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல்காதர், யாசின் ஆகிய 3 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில் இளைஞரிடம் பணம் பறிக்க மூளையாக செயல்பட்டது நேஹா மெஹர் (26) என்ற பெண் தான் என்று தெரியவந்துள்ளது.

இதனால், அவரை கைது செய்ய, புட்டேனஹள்ளி போலீசார் இரண்டு நாட்களுக்கு முன், மும்பை சென்றனர். நேற்று முன்தினம் காலை நேஹா மெஹரை கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர்.

பணம் பறித்த பெண்

இது குறித்து போலீசார் கூறுகையில் 'நேஹா சமூக வலைத்தளங்களில் வசதி படைத்தவர்கள் மற்றும் தொழிலதிபர்களை கண்டு பிடிப்பார். அவர்களிடம் தோழியாக பழகி அதன் பின் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசுவார். பின்னர் அவர்களை பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனது வீட்டிற்கு உல்லாசம் அனுபவிக்க வரவழைப்பார்.

12 ஆண்களிடம் உல்லாசம்; ஹனிடிராப் முறையில் பல லட்சம் பறித்த இளம் பெண் - பகீர் சம்பவம்! | Honeytrap Case Model Neha Meher Arrested I

வந்தவர்களை வீடு வாசலில் பிகினி உடையில் கட்டி அனைத்து வீட்டிற்குள் கூட்டிச் செல்வார். இது அனைத்தும் வீட்டில் பொருத்தி வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிவிடும். பின்னர் அங்கு மறைந்திருக்கும் சரண பிரகாஷ், அப்துல்காதர், யாசின் ஆகிய 3 பேர் பதிவான வீடியோவை வீட்டிற்குள் வந்தவர்களிடம் காட்டி வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி பணம், மொபைல் போன், நகை போன்றவற்றை பறித்து விடுவார்கள்.

பணம், நகை இல்லாமல் வருவோரின் மொபைல் போன்களை பறித்து, அதில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மொபைல் எண்களை எடுத்துக் கொள்வர். 'பணம் தரா விட்டால் வீடியோவை அனுப்பி விடுவோம்' என்று மிரட்டுவார்கள். இதுவரை, 12 பேரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பறித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.