மதுபான கொள்கை வழக்கு: ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை 8 முறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஜாமீன்
ஆனால் ஒருமுறை கூட ஆஜராகாமல் கெஜ்ரிவால் புறக்கணித்து வந்தார். இதனிடையே டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதனை ஏற்று இன்று நேரில் ஆஜரான டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ரூ.15,000 பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.