தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து; கருப்பு பணம் திரும்பிடும் என பயம் - அமித் ஷா வேதனை!
தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து குறித்து அமித் ஷா வேதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரம் ரத்து
தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1,000-ல் தொடங்கி, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
தனிநபர், நிறுவனம் என யார் வேண்டுமானாலும் இதை வாங்கி, தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த திட்டத்தை அண்மையில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து, நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அமித் ஷா, இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அமித் ஷா கருத்து
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன். தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்திருக்கலாம் என நான் நம்புகிறேன்.
ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன். பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது.
மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை எங்கே போனது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.