இன்று மாநிலங்களவை தேர்தல் - மாற்றி வாக்களிக்கும் MLA'க்கள்? உச்சகட்ட பரபரப்பு
காலியாகவுள்ள 15 மாநிலங்களவை எம்.பி'க்களுக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
மாநிலங்களவை எம்.பி'க்கள்
இந்த வருடம் காலியான 56 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு ஏற்கனவே 41 உறுப்பினர்கள் தேர்வாகிவிட்டனர்.நாட்டின் முக்கிய தலைவர்களான காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, பாஜகாவின் ஜே.பி.நட்டா, அசோக் சவான், எல்.முருகன் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் மீதமுள்ள 15 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளன. கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சார்பில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
கடும் மோதல்
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது. உத்திரபிரதேச தேர்தலில் தான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு 10 இடங்களுக்கு பாஜக 8 பேரையும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 3 உறுப்பினர்களையும் களமிறக்கியிருக்கும் நிலையில், ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.