வலுப்பெறும் இந்தியா கூட்டணி - உ.பி'யில் லாக்கான காங்கிரஸ் - சமாஜ்வாடி தொகுதி பங்கீடு..!
இந்தியா கூட்டணியில் முதல் மாநிலமாக உத்திர பிரதேசத்தில் கூட்டணி பங்கீடு முடிவாகியுள்ளது.
உத்திர பிரதேசம்
நாட்டின் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம். 80 மக்களவை தொகுதிகளை கொண்ட இங்கு, பாஜக கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் 80-இல் பாஜக 62-ஐ கைப்பற்ற, பகுஜன் சமாஜ்வாடி 10 இடங்களும், சமாஜ்வாடி 5 இடமும் வென்றிருந்தன.
காங்கிரஸ் ஒரு இடத்தை மட்டுமே தக்கவைத்து கொண்டது. மிக பெரிய மாநிலம் என்பதால் இம்மாநிலத்தின் வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் - சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இழுபறி நீண்ட காலமாக நீடித்தது.
முதல் மாநிலமாக...
இந்நிலையில் தான் நேற்று 17 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வழங்க சமாஜ்வாடி கட்சி சம்மதித்தாக தகவல் வெளிவந்த நிலையில், இன்று அது அதிகாரபூர்வமாக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 80 இடங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 62 இடங்களிலும், காங்கிரஸுக்கு 17 இடங்களும், சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே ,முதல் மாநிலமாக உத்திர பிரதேசத்தில் தொகுதி பங்கீடு சுமூகமான முடிவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.