இந்தியா கூட்டணி - சமாஜ்வாதி'யின் லாஸ்ட் offer - ஏற்குமா காங்கிரஸ்..?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி கணக்குகள் குறித்த பேச்சுவார்தைகள் சூடுபிடித்துள்ளது.
கூட்டணி கணக்கு
இந்தியா கூட்டணி எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்று தொகுதி பங்கீடு செய்வதில் தான் பெரும் சிக்கல் நீடித்து வருகின்றது. காரணம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் பல மாநில கட்சிகளும் இந்தியா கூட்டணியில் தான் உள்ளன.
ஏற்கனவே, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மீ போன்ற கட்சிகள் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு இடஒதுக்கீடு செய்யமுடியாது என திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பெருமளவில் கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை.
இவ்வளவு தான்....
80 தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியே அதிகளவு இடங்களில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றது.
Akhilesh Yadav History in Tamil; இளம் வயதிலேயே முதலமைச்சர் பதவி - சட்ட ஒழுங்கில் திண்டாடிய அகிலேஷ் யாதவ்!
ஆனால், இந்தியா கூட்டணி இருக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் அக்கட்சி தற்போது காங்கிரஸ் கட்சிக்கு கடைசி ஆஃபர் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி வெற்றி பெரும் என கணிக்கப்பட்டு 17 இடங்களை அளிக்க சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது.
ஆனால், இதனை காங்கிரஸ் கட்சி ஏற்குமா என்ற கேள்வியும் எதிர் இருக்கின்றது. அதிக இடங்களில் போட்டியிட முனையும் காங்கிரஸ் கட்சி, இந்த முடிவை ஏற்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்வளவு தான் தர முடியும்.