இந்த பழக்கம் தான் ஆண்களின் வறுமைக்கு காரணம் - லட்சுமி அருள் கிடைக்க என்ன செய்வது?

India Astrology Jharkhand
By Jiyath Jun 27, 2024 06:57 AM GMT
Report

எப்போதும் வறுமை

ஜார்கண்ட் தலைநகரில் ராஞ்சியைச் சேர்ந்த ஜோதிடர் சந்தோஷ்குமார் சவுபே. இவர், சில பழக்கங்களை ஆண்கள் கைவிடாவிட்டால் அவர்களிடம் ஒரு பைசா கூட இல்லாமல் நிர்கதியாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பழக்கம் தான் ஆண்களின் வறுமைக்கு காரணம் - லட்சுமி அருள் கிடைக்க என்ன செய்வது? | Bad Habits Man Should Stop To Lakshmi Blessings

அவர் கூறுகையில் "எவ்வளவு தான் உழைப்பாளியாக ஆண்கள் இருந்தாலும், சில பழக்கங்களால் கோடீஸ்வரர்களாக மாற முடியாது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வெற்றியை அடையவே வாய்ப்பில்லாமல் போகும். அதனால், எப்போதும் வறுமையிலேயே அவர்கள் இருப்பார்கள்.

குறிப்பாக பெண்களை இழிவுபடுத்துவது, அடித்து துன்புறுத்துவது, தவறாக நடந்து கொள்வது, துஷ்பிரயோகம் செய்வது போன்ற செயல்களே ஆணின் வறுமைக்கு மிக முக்கியமான காரணம். இதுபோன்ற செயல்கள் ஒரு வீட்டில் நிகழும்போது லட்சுமி தேவி அங்கு இருக்க விரும்புவதில்லை.

பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுணமா? ஜோதிடமும், அறிவியலும் - என்ன சொல்கிறது?

பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுணமா? ஜோதிடமும், அறிவியலும் - என்ன சொல்கிறது?

தவறான சகவாசம்

அத்தகைய மனிதர்கள் எப்போதும் கடனில் இருப்பார்கள். அவர்களிடம் பணம் இருந்தாலும் நீண்ட காலத்திற்கு நீடிக்காது. அதேபோல், சூரிய பகவான் உதித்ததும் காலையில் எழும் பலர் பல் துலக்க விரும்புவதில்லை.

இந்த பழக்கம் தான் ஆண்களின் வறுமைக்கு காரணம் - லட்சுமி அருள் கிடைக்க என்ன செய்வது? | Bad Habits Man Should Stop To Lakshmi Blessings

உடனே குளிக்கவும் சோம்பேறித்தனமாக இருக்கிறார்கள். அத்துடன் பொருட்களை கண்ட கண்ட இடங்களில் வைப்பார்கள். இப்படி இருப்பவர்களின் அருகிலும் லட்சுமி தேவி இருக்க மாட்டார். ஏனெனில், அங்கு எதிர்மறை ஆற்றல் நிரம்பி, வீட்டில் எப்போது கருத்து வேறுபாடு, சண்டை, பதற்றம் போன்ற சூழ்நிலை உருவாகும்.

இதனால் ஆண்களிடம் பணம் எப்போதும் தங்காது. மேலும், வேலை செய்யாமல் இருப்பது, ஒழுக்கம் இல்லாதது, வீண் விசயங்களில் ஈடுபடுவது, தவறான நபர்களுடன் சகவாசம் போன்றவை முன்னேறுவதற்கு எப்போதும் அனுமதி கொடுக்காது. எனவே, அத்தகைய மனிதர்கள் கோடீஸ்வரர்களாக மாறுவதில்லை. ஏழைகளாகவே இருப்பார்கள்" என்று சந்தோஷ்குமார் சவுபே தெரிவித்துள்ளார்