நீண்ட நாட்கள் வாழ ஆசை.. பாக்டீரியாவை உடலில் செலுத்திக்கொண்ட விஞ்ஞானி - ஆராய்ச்சியில் நடந்த பயங்கரம்!
பாக்டீரியாவால் மனிதர்களை நீண்ட நாட்கள் வாழ வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.
பாக்டீரியா
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மாநில பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் அனடோலி ப்ரூச்கோவ் என்பவர் புதிய வகை பாக்டீரியாவைக் கண்டுபிடித்து உள்ளார். இந்த பாக்டீரியாவிற்கு 'பேசிலஸ் எஃப்' என்றும் பெயர் வைத்துள்ளார்.
சாதாரணமாகப் பாக்டீரியாக்களின் ஆயுட்காலம் வெறும் 12 மணி நேரம்தான் என்று கூறப்படுகிறது.ஆனால் சில குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் வரை கூட வாழும் தன்மை கொண்டது.ஆனால், அனடோலி ப்ரூச்கோவ் உருவாக்கிய 'பேசிலஸ் எஃப்' பாக்டீரியா, ஏறத்தாழ 35 லட்சம் ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்திருக்கிறது.
அதுவும் உறைபனியிலும்,தீவிரமான கதிர்வீச்சு தாக்குதலிலும் பாக்டீரியா உயிர் பிழைத்திருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?இது குறித்து எலி, ஈ , பழங்களில் உள்ளிட்ட உயிரினங்களின் உடலில் செலுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஆராய்ச்சி
அதில் பேசிலஸ் எஃப்' பாக்டீரியா செலுத்தப்பட்ட அதிக ஆற்றலுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளது.மேலும் ஈ மற்ற ஈக்களை விட நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்கின்றன. அதன்பிறகு, ஆய்வாளர் அனடோலி ப்ரூச்கோவ் பேசிலஸ் எஃப் பாக்டீரியாவை தன்னுடைய உடலில் செலுத்திக்கொண்டிருக்கிறார்.
இதில் சுராஸ்யமான விசயம் என்னவென்றால் இந்த ஆய்வை கடந்த 2009ம் ஆண்டு நடத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அன்று முதல் இன்றுவரை தான் நன்றாக இருப்பதாவும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும் இவரது உடலை மற்ற ஆய்வாளர்கள் பரிசோதித்தால்தான் உண்மை என்ன என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார்.