சீனாவை தொடர்ந்து இந்தியா.. HMPVவைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்வு- வெளியான அதிர்ச்சி Report!
இந்தியாவில் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
HMPVவைரஸ்
சீனாவில் புதிய HMPVவைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸூக்கு ஹியூமன் மெடப்னியுமோவைரஸ் (human metapneumovirus) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கொரோனாவை போலவே இருமல், காய்ச்சல், ஜலதோசம் உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இவை இருமல், தும்மல், தொடுதல் உள்ளிட்டவை மூலம் எளிதில் பரவக்கூடியது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.HMPV வைரஸ் பரவலால் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் தகன கூடங்களில் சடலங்களை எரியூட்ட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எந்த வெளிநாடுகளுக்கும் பயணிக்காத 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா
மேலும் இது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ICMR மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.இதனையடுத்து தற்பொழுது பெங்களூருவில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3 ஆவது குழந்தை HMP வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவில் இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேரிடரா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.