பிரபல உணவகத்தின் சாம்பாரில் செத்து கிடந்த குட்டி எலி - அதிரடி காட்டிய அதிகாரிகள்!

Nilgiris
By Vinothini Oct 14, 2023 10:55 AM GMT
Report

உணவக சாம்பாரில் எலி ஒன்று செத்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பாரில் எலி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற ராணுவ வீரர், விடுமுறையில் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அம்மாஸ் கிச்சன் என்ற பிரபல தனியார் உணவகத்தில் சாப்பிடுவதற்கு சென்றுள்ளார். அப்போழுது அவர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் சிறிய எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது.

baby-rat-found-in-hotel-sambar-ooty

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அதனை மேலாளரிடம் கேட்டபோது அவர் பொறுப்பில்லாமல் பதிலளித்ததால் கடுப்பான சுற்றுலா பயணிகள் அதனை வீடியோ பதிவு செய்து மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதய நோயால் இறந்த 3 மாத குழந்தை.. காதல் மனைவி செய்த காரியம், சோகத்தில் கணவர் எடுத்த முடிவு - அதிர்ச்சி!

இதய நோயால் இறந்த 3 மாத குழந்தை.. காதல் மனைவி செய்த காரியம், சோகத்தில் கணவர் எடுத்த முடிவு - அதிர்ச்சி!

அதிகாரிகள் அதிரடி

இந்நிலையில், உணவு துறை அதிகாரிகள் அந்த வீடியோவில் பார்த்தவாறு அது புழு போல் தான் தெரிந்தது, எலி இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், அது நாளை காலையோ அல்லது மறுநாளோ நடவடிக்கை ஈடுபடும் என்று சாதாரணமாக கூறியுள்ளார். உணவகத்துடன் இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதை உணர முடிவதாகவும், உணவு தேவையை ஆரோக்கியத்துடன் இங்குள்ள உணவகங்கள் வழங்குவதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

baby-rat-found-in-hotel-sambar-ooty

அதனால் நேற்று மாலை இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு சமையல் அறை, உணவு பயன்பாட்டு உபகரணங்கள், குடிதண்ணீர் ஆகியவற்றை ஆய்வு மேற்க் கொண்டு, பழைய கோழி இறைச்சி உள்ளிட்டவைகளை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. பின்னர், ஒருவார காலம் உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.